12.29.2008

மலரே...

என்னை மண் கொண்டு போனாலும்,
மலரே...
உன்னை தாங்கும் வேரில் உரமாய் இருப்பேன்...

--வாலுபய்யன்.

12.22.2008

வழி(ளி)யில்

கண்கள் வழி(ளி)யாக இதயம் நுழைந்தாய்,
இதயம் வழி(ளி)யாக நினைவில் நின்றாய்,
எல்லாம் சரி கண்ணே,
எந்த வழி(ளி)யில் என் கல்லறை வருவாய்???

--வாலுப்பையன்.

12.15.2008

இதயம்

இறந்தும் நினைக்கும் ,// (இதயம்) //,
இருந்தும் மறக்க எப்படி முடிந்தது உன்னால்...

--வாலுப்பையன்

10.17.2008

அவளும் பெண் தானே

நிலாவைப் பற்றி கவிதை வரைந்தேன்
 அவள் ரசிக்கவில்லை...
அவளை நிலவென்றேன்
 அஹா கவிதை என்றாள்...
ஆயிரம் தான் இருந்தாலும்
 அவளும் பெண் தானே...
--வாலுப்பையன்

9.29.2008

பெண்ணும் பூவும் ஒன்று தான்... 
இதழ்கள் இருக்கும்...
இதயம் இருக்காது....

----வாலுப்பையன்

8.11.2008

சிலை

செதுக்கியவனும் இல்லை,
செதுக்கப்பட்டவனும் இல்லை...
ஆனாலும்,
கலவரத்திர்க்கு காரணமாய் நிர்க்கும்,
கை உடைந்த தலைவர் சிலை...
--வாலுப்பையன்.

8.04.2008

நட்பு

உன் வாழ்வில் சோகம் வேண்டினேன்...
என் தோழில் நீ சாய்ந்து அழும் 2 நொடிக்காக...

--வாலுப்பையன்.

7.13.2008

நகைச்சுவை

படத்தில் பதிந்தது


புல் அடிச்சும் போதை இல்லை...புள்ளெட் பீர் அடிச்சும் கிக்கு இல்லை...கல்லு குடிச்சும் தூக்கம் வரலை ...கண்ண முடுனா கனவுல நீ தானே ... வேற யாரு வருவா ???


9 கிளாஸ் கவுத்தியும் போத எனக்கு ஏறல ...என்ன கவுத்தும் சரக்க தான் இன்னும் கண்டு பிடிக்கல ...

6.24.2008

பாசம்

நிறம் கண்டு முகம் கண்டா
நான் நேசம் கொண்டேன்...
அவள் நிழல் கண்டு நிஜம் என்று
நான் பாசம் கொண்டேன்...

--வாலுப்பையன்

6.21.2008

வரம்

இறப்பதற்க்கு வரம் கேட்டேன் இறைவனிடம்...
உன்னைக் குடுத்தான்...
நான் வாழ்வதற்க்கு காரணமாக...

--வாலுப்பையன்

6.17.2008

ப்ராத்தனை

மன நிம்மதிக்காக கோவிலுக்குள் சென்றேன்...
உள்ளே சென்ற என் மனதில்
வெளியில் உள்ள 300 ரூபாய் செருப்பு....

--வாலுப்பையன்

6.12.2008

இரா இரவியின்

1-->

மிருகம் கொல்
வெளியில் அல்ல
உள் மனதில்

2-->

அத்தை இல்லா வீடு
சொத்தை அன்று
சொர்க்கம் இன்று

3-->

மழை மகத்தானது
பெய்தும் பயனில்லை
கடல்மீது

--இரா இரவியின்

நிலாரசிகன்

என்றும் நான் அவன் ரசிகன்...


சுட்டது

1-->

பேருந்தின் பின்னால் அழகை
ரசிக்க முடிய வில்லை...
நடத்துனரின் சில்லரை பாக்கி...


2-->

பிரிந்து ப்ரியம் காட்ட வேண்டாம்...
அருஹில் இருந்து நீ சண்டை போடு போதும்...


3-->

காதல் இண்றி வாழ்ந்தால்
கோவிலும் கல்லரை தான்...
காதலி ஒருத்தி தூங்குவதால்
கல்லரையும் கோவில் தான்...(தாஜ்மஹால்)

எனது கனவு

1--> சந்தேகம்

தோட்டத்தில் உன்னை பார்த்த எனக்கும்,

வண்டுக்கும் ஒரே சந்தேகம்....

எது மலர் என்று...

2--> பொளர்னம

என்ன அதிசயம் ...
ஒரே நேரத்தில் இரு பொளர்னமி ...


உன் கண்கள்...

3--> காதலின் மருமுகம் ஊடல்

பெண்னே நமக்குள் இருக்கும் ஊடல் ,
அது காண்ல் நீர்...
நான் உன்மேல் கொண்ட காதல் ,
அது கங்கை நீர்...


சொல்லதான் நினைத்தேன் உன்னிடம்...
நீ தான் இல்லை என்னிடம்...


3-->

என்னை ஏமாற்ற
எல்லாராலும் முடியும்
முட்டாள் ஆக்க
உன்னால் மட்டும் முடியும்...

4-->

இழப்பதற்க்கு ஒன்று
எனக்கும் உண்டு
என்னவளே நீ தான் அது...

5-->

ஒன்ரும் இல்லாமல் பலர் இருக்க
நீ கிடைத்தாய் நான் இழக்க

--வாலுப்பையன்

6.11.2008

செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்

தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று

அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன

சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே

பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்

மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்...


--கவிமதி.