6.11.2008

செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்

தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று

அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன

சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே

பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்

மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்...


--கவிமதி.

கருத்துகள் இல்லை: