1.13.2013

ஏகலய்வன் போல

துரோனரை பார்க்காமல் வில் கற்ற ஏகலய்வன் போல,
என், காலம் உள்ள வரை காதல் செய்வேன் 
 உன்னை காணாமலே கண்ணே...

-வாலுப்பையன் 

7.28.2010

தோன்றினால்...

அவள் கை பிடித்து நடக்கும் பொழுது என் தந்தையாக தோன்றினால்...

அவள் என்னுடன் இடும் சண்டையில் என் தாயாக தோன்றினால்...

அவள் என் தோள் சாய்ந்து அழும் பொழுது என் சஹோதரியாக தோன்றினால்...

அவள் என்னை பிரிந்த பின் எதிலும் அவளே தோன்றினால்...

--வாலுப்பையன்

7.27.2010

கோவில்

கருவறையில் இருந்ததால் நான் கடவுள் ஆகவில்லை என்றாலும்...
கருவறையில் என்னை சுமந்ததால் அவள் என் கோவில் ஆகிறாள்...
--வாலுப்பையன்

7.19.2010

பொருட்பால் தெரியாமல் தீர்வில் தோற்றேன்...
பெண்பால் புரியாமல் காதலில் தோற்றேன்...

--வாலுப்பையன்

7.14.2010

அவள்

என்,
காதல் தேடினேன்...
பாசம் தேடினேன்...
நட்பை தேடினேன்...
உறவை தேடினேன்...
உலகம் தேடினேன்...
அவளை கண்டேன், இபொழுது
அவளை ...
--வாலுப்பையன்

பெண்கள்

"எல்லா பெண்களும் ஒன்று தான்" என்று சொன்னால் பெண்களுக்கு கோவம் வரும் ஏனென்றால் "எல்லா பெண்களும் ஒன்று தான்"
--வாலுப்பையன்

2.13.2009

பார்த்தவுடன் தெரியவில்லை,
பலகியபோது புரியவில்லை,
நீ என்னை வெறுப்பதற்கு காரணம் கூறும்போது தான் புரிந்தது,
நான் உன்னை எவ்வளவு விரும்பினேன் என்று...
--வாலுப்பையன்

12.29.2008

மலரே...

என்னை மண் கொண்டு போனாலும்,
மலரே...
உன்னை தாங்கும் வேரில் உரமாய் இருப்பேன்...

--வாலுபய்யன்.

12.22.2008

வழி(ளி)யில்

கண்கள் வழி(ளி)யாக இதயம் நுழைந்தாய்,
இதயம் வழி(ளி)யாக நினைவில் நின்றாய்,
எல்லாம் சரி கண்ணே,
எந்த வழி(ளி)யில் என் கல்லறை வருவாய்???

--வாலுப்பையன்.

12.15.2008

இதயம்

இறந்தும் நினைக்கும் ,// (இதயம்) //,
இருந்தும் மறக்க எப்படி முடிந்தது உன்னால்...

--வாலுப்பையன்